பக்கம்:நல்ல கதைகள்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

20


வேடிக்கை காட்டுறியா, இல்ல நாடகம் ஆடுறியா? என்னம்மா! வீட்டுக்குள்ளே அரிசி போனதாலே அப்படியே, விட்டுட்டுப் போயிடுவேன்னு பார்க்குறியா?

பணம் இல்லேன்னா பட்டினி கிடக்குறது பச்சையா ஏன் பொய் சொல்லி பசப்பனும்? கொண்டா அரிசியை!

கொண்டு வந்தாள் அரிசியை. முரட்டுத் தனமாக முறத்தை வாங்கிய அவன், கூடைக்குள்ளே கொட்டிக் கொண்டான். அவளை ஏளனமாகவும் எரிச்சலாகவும் பார்த்துவிட்டுப் போய்விட்டான்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் கண்ணனின் தாய் கமலத்தை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். வேறு, அவளுக்கு மானமே போய் விட்டது போல் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/22&oldid=1081116" இலிருந்து மீள்விக்கப்பட்டது