பக்கம்:நல்ல கதைகள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


முதலில் பைசா பைசாவாக மீதி பிடித்தான். பிறகு சாமான்களை குறைத்து வாங்கி, ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என மீதிப் பிடித்தான்.

அதற்காகப் பொய் சொன்னான், அஞ்சாமல் அம்மாவை அதட்டினான். மீறினால் அடிக்கக்கூட முயன்றான். பிறகு, ரூபாயைத் திருடவே தொடங்கி விட்டான்.

திருடிய பணத்தை வைத்துக் கொண்டு பள்ளிக்குப் போகாமல் தெரு ஓரங்களில் காசு வைத்து கோலி விளையாடச் சென்றான்.

பள்ளிக்கூடம் போனாலும், மெளனசாமியார் போல உட்கார்ந்திருப்பான். பாடமும் ஏறாது. படிப்பிலும் ஒரு ஆர்வமும் இராது.

இவ்வாறு அம்மாவின் உழைப்பை ஏமாற்றிப் பெற்று, ஏய்த்து இன்பங்கண்டான் கண்ணன். தாயை ஏமாற்றினான் முதலில். இப்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/25&oldid=1081119" இலிருந்து மீள்விக்கப்பட்டது