பக்கம்:நல்ல கதைகள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தான். யானை அடியெடுத்து வைப்பது போலத்தான் நடப்பாள்.

பர்வதம் அந்த அறையைக் கூட்டத் தொடங்கினாள். வெண்கலக் கடையிலே யானை புகுந்தது போல ஒரே சத்தம்.

அலாரத்தை விடக் கடுமையாக இருந்தது அவள் எழுப்பிய சத்தம். திடுக்கிட்டு விழித்தான் மணி.

'போகப் போறியா இல்லையா' ? வெறி கொண்டவன் போல மணி கத்தினான்.

'சோம்பேறி' என்ற நல்ல வார்த்தையை 'சோமாறி' என்று கூறி அவனை மனத்துக்குள்ளே வைது விட்டுப் நகர்ந்தாள் பர்வதம்.

மீண்டும் புரண்டு படுத்தான் மணி. 'ஏழு மணியாகிவிட்டது' எழுந்திரு மணி என்று எழுப்ப நினைப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/39&oldid=1081141" இலிருந்து மீள்விக்கப்பட்டது