பக்கம்:நல்ல கதைகள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வேலையைப் பார்க்கப் போய் விட்டாள்.

'எழுந்திரப்பா, எட்டு மணி ஆகி விட்டது, என்பது போல சுவர்க் கடிகாரம் அடித்து ஒலித்தது. சொகு சான தூக்கம் இப்படி கலைக்கப்பட்டு விட்டதே என்று கடுப்புடன் எழுந்தான் மணி. எப்பொழுதும் அவன் காலை ஒன்பது மணிக்கு எழுந்துதான் பழக்கம்'.

ஆறு மணியிலிருந்து இப்படித் தூக்கம் கலைந்து விட்டதால், அவனுக்கு ஏகப்பட்ட கோபம். அதே வேகத்துடன், எழுந்து, காலைக் கடன்களை முடித்து விட்டுக் குளியலறைப் பக்கம் போனான்.

அங்கே ஒரு பெரும் அதிர்ச்சி அவனுக்காகக் காத்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/43&oldid=1081145" இலிருந்து மீள்விக்கப்பட்டது