பக்கம்:நல்ல கதைகள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

48


'பரிதாபமா, இல்லை பரிகாசமா! வேலையைப் பாருப்பா. . . மணி மனங்குமுறிக் கொண்டிருந்தான்.'

நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது. அங்குமிங்கும் நடை போட்டு அலைந்து கொண்டிருந்த மணியை நோக்கி வேதாரண்யம் வந்தான்.

ஏன்பா! ஏன் தனியே வர்ரே?

'பெட்ரோல் விலை ஏறிப் போச்சாம், மீட்டர் கட்டணத்தை உயர்த்தனும்னு டாக்சி முதலாளியெல்லாம் போராட்டம் நடத்தப் போறதுக்கு முன்னாலே, ஒரு அடையாள வேலை நிறுத்தம் செய்யனும்னு முடிவு செய்தாங்களாம், அதனால் சாலையில் ஒரு வண்டி கூட ஓடவே இல்லை!'

ஐயையே! அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு கத்தினான் மணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/50&oldid=1081153" இலிருந்து மீள்விக்கப்பட்டது