பக்கம்:நல்ல கதைகள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

50


'அரசு பேருந்துதான் கடைசிப் புகலிடம் என்று யோசனை கூறினான் வேதாரண்யம்'.

அவசரம் அவசரமாக சான்றிதழ்களை அள்ளிக் கொண்டு. 'பேருந்து' நிற்குமிடத்துக்குப் பறந்தான் மணி.

அன்றைக்கு அறுபத்துமூவர் திரு விழாவாம். பட்டணத்து மக்களில் பாதிக்கூட்டம் அங்குதான் இருந்தது.

மலையிலே தெரியும் ஒற்றையடிப் பாதையைப் போல வரிசை நீண்டு நின்றது.

எச்சிலை விழங்கினான் மணி. கண்கள் மூடி மூடித்திறந்தன. 'எப்படி பஸ்ஸுக்குள் ஏறப் போகிறாய்' என்று மனம் கேட்டு அவனை பயமுறுத்தியது.

பஸ் வந்து ஓர் பயங்கர உறுமலுடன் நின்றது. எறும்புபோல வரிசையாய் நின்ற மக்கள், இப்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/52&oldid=1081177" இலிருந்து மீள்விக்கப்பட்டது