பக்கம்:நல்ல கதைகள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


புழுக்கத்துடன் திரும்பினான் வீடு நோக்கி.

இது வரை ஒன்றும் சாப்பிடவில்லை யாதலால், பக்கத்திலே உள்ள வெற்றிலை பாக்குக் கடைக்குச் சென்று குளிர்ந்த பானம் ஏதாவது அருந்தலாம் என்று நடந்தான் மணி.

வயிறு குளிர்ந்தது, வாய் நனைந்தது குளிர் பானத்தால். அடுத்து, பானத்திற்குரிய பணம் தரவேண்டுமே?

முழுக்கால் சட்டையின் பின் பக்கப் பாக்கெட்டில் கையை விட்டான். பணப்பை (மணிப்பர்சு) அங்கே இல்லையே! கூட்டத்தில் எவனோ கொண்டு போய் விட்டானே!

கையிலே காசு இல்லாது கலங்கினான் மணி. தன்னிடம் காசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/57&oldid=1081182" இலிருந்து மீள்விக்கப்பட்டது