பக்கம்:நல்ல கதைகள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

64


விருந்து வைத்தார் மனோகரன். இன்ஸ்பெக்டருக்கு மட்டுமல்ல, மணிக்கும்தான். காலையிலிருந்து அவன் பட்டினியல்லவா!

பசித்துப் புசி என்பதற்கிணங்க, ருசித்துப் புசித்தான் மணி புத்தி வந்த புது மனிதனாக தந்தையைப் பார்த்து புன்னகை புரிந்தான்.

வேலை போனாலும் பரவாயில்லை, சோம்பல் மூளை போயிற்றே என்று மனம் மகிழ்ந்தார் மனோகரன். ஆமாம் என்பது போல சுவர்க் கடிகாரம் ஆறு முறை அடித்து ஆமோதித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/67&oldid=1081193" இலிருந்து மீள்விக்கப்பட்டது