பக்கம்:நல்ல கதைகள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


3. அன்பு தந்த பரிசு!

மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் அந்தக் கிராமம் குளித்துக் கொண்டிருந்தது.

காலையிலே காட்டுக்கு மேயப் போன ஆடுகளும் மாடுகளும், கழுத்தில் மணியோசை குலுங்க அசைந்தாடி நடந்து கொண்டிருந்தன.

வேலைக்குப் போனவர்கள் வீட்டை நோக்கி வேகமாக நடை போட்டனர். பறவைகள் பறந்து மரங்களில் அமரும் சத்தம் வேறு அந்த நேரத்தை ஆரவாரப் படுத்திக் கொண்டிருந்தது.

சிங்காரமோ, அந்தக் கிராமத்தையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான்.

ஊருக்குள் போகலாமா? அல்லது இப்படியே திரும்பி போய்விட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/68&oldid=1081374" இலிருந்து மீள்விக்கப்பட்டது