பக்கம்:நல்ல கதைகள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

66


லாமா? குழம்பிய மனதை அவன் முகம் தெளிவாகக் காட்டியது.

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறான் அவன். அது சிங்காரத்தின் சொந்த ஊர். தாயும் தந்தையும், உற்றாரும் உறவினரும், நண்பர்களும் அன்பர்களும் வாழ்கின்ற இடம்.

ஊருக்குள் நுழைவதற்கு என்ன தயக்கம்? உள்மனத்திலே ஏதோ உறுத்தல்!

அந்த ஆற்றைக் கடந்து விட்டால் ஊர் வந்து விடும். எல்லோரையும் பார்க்கலாம், பேசலாம், பழகலாம், மகிழலாம்.

மணலிலே நடை போட்ட அவன், அந்த ஒர் இடம் வந்ததும் அப்படியே அமர்ந்து விட்டான்.

கையிலே மணலை அள்ளிப் பார்த்தான். ஆமாம்! 'இதே இடந்தான்'! இதே மணல் மேடுதான்...!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/69&oldid=1081375" இலிருந்து மீள்விக்கப்பட்டது