பக்கம்:நல்ல கதைகள்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மணல் மீது புரண்டு, மனம் போல்திரிந்து, மற்ற சிறுவர்களுடன் ஒடி ஆடிய நினைவுகள் அலை அலையாக அவனது நினைவுக்குள் வந்தன.

மகிழ்ச்சி ஒருபுறம். மனவேதனை மற்றொருபுறம். அவன் மனம் பழைய நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்க்கத் தொடங்கியது.

அவன் பெற்றோருக்கு அவன் ஒரே மகன். நஞ்சை நிலம் நான்கு ஏக்கர் உண்டு. வசதியான குடும்பம்.

இவ்வளவு இருந்தால் போதாதா ஒருவனுக்கு!

தாயின் செல்லம் சிங்காரத்தைத் தறுதலையாக்கி விட்டது.

தந்தையோ அவனைக் கண்டிப்பதே இல்லை. 'தான் வைத்ததே சட்டம்' என்று தலை கொழுத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/70&oldid=1081376" இலிருந்து மீள்விக்கப்பட்டது