பக்கம்:நல்ல கதைகள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


திரிவதில் அவனுக்கு நிகர் யாரும் அந்தக் கிராமத்திலே கிடையாது என்று திரிந்தான்.

தன்னோடு ஒத்த சிறுவர் கூட்டத்திற்கு அவனே தலைவன். அவன் இட்டதே சட்டம். கொண்டதே கொள்கை.

யாரும் அவனுக்கு அறிவுரை கூறக்கூடாது. அவ்வாறு கூறினால் கேட்டுக் கொண்டேயிருந்து விட்டு, அவர்களை ஏளனமாகப் பார்த்து, இகழ்ச்சியாகப் பேசி விட்டுப் போய்விடுவான்.

பள்ளிக் கூடம் போன நேரம் போக, அவனுக்கு அந்த ஆற்றின் மணல்மேடுதான், அவன் நடத்தும் காரியங்களுக்கு மேடையாகத் திகழ்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/72&oldid=1081378" இலிருந்து மீள்விக்கப்பட்டது