பக்கம்:நல்ல கதைகள்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


எல்லோரையும் பார்த்துச் சிரித்தவாறே இருந்த சிங்காரம், திடீரென்று சந்திரனிடம் ஓடினான். அவன் கையைப் பிடித்துக் குலுக்கினான்.

கைப்பட்டதுமே, 'ஆ' என்று கத்தினான் சந்திரன். ஆமாம் அடித்த வேகத்தில் கை சுளுக்கிக் கொண்டு, வீங்கிப் போயிருந்தது.

‘விளக்கெண்ணெய் கொண்டு வா' என்று தனது பழைய நண்பனைக் கேட்டான் சிங்காரம்.

கொண்டு வந்ததும் வாங்கி, சந்திரன் கையில் போட்டுத் தடவி, இதமாக நீவி சுளுக்கை இழுத்து விட்டான்.

எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கோயிலுக்குப் போயிருந்த சிங்காரத்தின் தாயாரும் தந்தையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/94&oldid=1081476" இலிருந்து மீள்விக்கப்பட்டது