பக்கம்:நல்ல குழந்தை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

க் குழந்தைக்கோ எழுத்துக் கூட்டி வாசிக்கவும் தெரியாது. அது படித்த பெரியோர்களைக் காட்டிலும் அழகாகப் பாடுவதைக் கண்டு தகப்பனார் ஆச்சரியம் அடைந்தார்.

மூன்று வயதுள்ள குழந்தை நன்றாகப் பேசுவதே அருமை. பாடுவதோ மிகவும் அருமை. அச்சிறு குழந்தை எந்தப் புத்தகத்தையும் படிக்காமல், தானே கட்டிப் பாடிற்று என்றால் — அது மிகவும் ஆச்சரியம் அல்லவா! அக் குழந்தை பாடிய பாட்டுக்களில் ஒன்று இது. இதைப் படித்துப் பாருங்கள்.

“தோடுடைய செவியன்; விடைஏறி ; ஓர் தூவெண் மதி சூடி;
காடுடைய சுடலைப்பொடி பூசி; என் உள்ளம் கவர் கள்வன்;
ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த,
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!”

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/14&oldid=1354598" இலிருந்து மீள்விக்கப்பட்டது