பக்கம்:நல்ல குழந்தை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ன்று முதல், சிறு குழந்தையாகிய ஞானசம்பந்தர் பல கோயில்களுக்குச் சென்றுவந்தார். அவர் மிகவும் சமீபத்தில் உள்ள கோயில்கட்குக் காலினால் நடந்தே செல்லுவார். மிகவும் தூரமாக இருந்தால், அவர் தந்தையார் அவரைத் தோளின்மீது தூக்கிச் செல்லுவார்.

ஒரு நாள் ஞானசம்பந்தர் சீர்காழிக்கு அருகே உள்ள ஓர் ஊருக்குச் சென்றார். அவர் அங்கே இருக்கும் கோயிலுக்குப் போய்க் கையினால் தாளம் போட்டுக்கொண்டு பாட்டுப் பாடினார். அப்போது, அவர் கைகள் சிவந்துவிட்டன. உடனே கடவுள்

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/17&oldid=1354610" இலிருந்து மீள்விக்கப்பட்டது