பக்கம்:நல்ல குழந்தை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்று வெள்ளத்திலே போடச் சொன்னார்கள். ஞானசம்பந்தர் அவ்விதமே செய்தார். அந்த ஓலை ஆற்றில் அடித்துக்கொண்டு போகாமல் அதற்கு எதிராகச் சென்றது.

அவைகளைக் கண்டதும் அந்த ஊர் மக்களுக்குக் கடவுள் பக்தி உண்டாயிற்று. ஞானசம்பந்தர்மீதும் அவர்களுக்கு மிகவும் அன்பு உண்டாயிற்று.

பிறகு ஞானசம்பந்தர் வேறு பல ஊர்களுக்குச் சென்று கடவுளைத்தொழுதார். அவர் ஓர் ஊருக்குப் படகில் ஏறிச் செல்லவேண்டி இருந்தது. அப்போது அவர் அங்கே இருந்த படகில் ஏறிக் கொண்டார்; பல பெரியோர்களையும் அதில் ஏற்றிக்கொண்டார். பிறகு கடவுளின்மீது பாட்டுப் பாடினார். உடனே

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_குழந்தை.pdf/26&oldid=1354640" இலிருந்து மீள்விக்கப்பட்டது