பக்கம்:நல்ல சேனாபதி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் வேலி அதம்பார் 91

பலவகையில் பாராட்டுகின்றன. ஒரு பெண்யானை படுத்திருக்கும் சிறிய இடத்தில் விளையும் விள்ைவைக் கொண்டு ஏழு ஆண் யானையைப் பாதுகாக்கலாம்” என்று ஒரு புலவர் பாராட்டுகிருர். நாடோடிப் பாவ வனே, "கட்டுக் கலங்காணும்; கதிர் உழக்கு நெல் கானும்” என்று அந்த வளத்துக்கு அளவு கூறுகிருன். "மற்ற நாடுகளில் ஏரிப் பாசனத்தாலும் இறைவை யாலும் விளையும் நெல்லும் சரி, சோழ நாட்டில் அரி காலின் கீழே சிந்தும் நெல்லும் சரி' என்று சங்க காலத்துப் புலவர் ஒருவர் சொல்கிருர்: -

அதம்பார் நிலவளத்தைக் கணக்கப்பிள்ளை சொல் லத் தொடங்கினர். அந்தப் பக்கங்களில் அவ்வூர் நிலவளத்தை யாவரும் அறிவார்கள். அதைப் பழ மொழியாகவே வழங்கி வந்தார்கள். அதனுல் கணக்கப் பிள்ளை எளிதிலே அவ்வூர் நிலப் பரப்பையும் அதன் வளத்தையும் சொல்லி விட்டார்:

"ஆயிரம் வேலி அதம்பார்; ஆன கட்டும் தாள்; வானம் முட்டும் போர்." பழமொழியைப் போல வழங்கும் இதை கணக்கப் பிள்ளை சொன்னர். அதம்பாரில் ஆயிரம் வ்ேலி நிலம். அங்கே விளையும் நெல்லின் தாளில் ஆனையைக் கட்ட லாம் என்ருல் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்! அறுப்புக்கு முன்ல்ை காணும் காட்சி அது. அறுவடை ஆன பிறகு களத்தில் போய்ப் பார்த்தால் நிலவளத்தை நன்கு உணரலாம்; வானத்தை முட்டும் போரால் உணர்ந்து கொள்ளலாம். - -

எல்லோருடைய வாயிலும் அடிபடும் பழமொழி யைத் தான் கணக்கப் பிள்ளை சொன்னர். எதிரே இருந்த திண்ணையில் உட்கார்ந்திருந்த செல்வர்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/100&oldid=584063" இலிருந்து மீள்விக்கப்பட்டது