பக்கம்:நல்ல சேனாபதி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் வேலி அதம்பார் இ5,

"நான் மோதிரம் தருவதாகத் தெரிவித்தேனே? என்ன ஐயா உளறுகிறீர்?" -

“என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? ஆயிரம் வேலி என்று ஆரம்பிக்கிற போதே நீங்கள் கைமோதி ரத்தைக் காட்டினிர்கள். அதையே நீங்கள் எனக்குப் பரிசாக அளிக்கிறதாகச் சாடை காட்டினிர்களே! அதன லல்லவா நான் சாமர்த்தியமாகப் பேச்சை மாற்றி னேன்?”

ஒகோ! அப்படியா சமாசாரம்? நான் என்ன அர்த். தத்தோடு கையைக் காட்டினேன் என்பதைத் தெரிந்து கொண்டு, நீர் சரியாக நடந்துகொண்டிர் என்றல்லவா நான் நினைத்தேன்?" -

"நீங்கள் சொல்லுவது எனக்கு விளங்கவில்லையே!” "இனிமேல் விளங்கினல் என்ன, விளங்காவிட் டால் என்ன? நீர் வேறு விதமாகச் சொல்லியிருந்தால் அப்போது விளங்கும்படி செய்திருப்பேன். 'சாக்கிரதை, யாகப் பேசும்; இல்லாவிட்டால் உம் தலையில் உழக்கு ரத்தம் வருவிப்பேன்’ என்றல்ல்வா நான் கைச் சாடை காட்டினேன்? உமக்கு மோதிரந்தான் தெரிந்ததோ? குட்டுப்பட்டாலும் மோதிரக் கையில் குட்டுப்பட வேண்டும் என்று நினைக்காமற் போனிரே.-பிரமாத காரியம் பண்ணிவிட்டாராம்!-இவருக்கு மோதிரப் பரிசு வேண்டுமாம்! இதற்கு எங்கேயாவது போய்க் கொள்ளை யடிக்கலாமே!’ & . -

அந்தப் பணக்காரருக்குக் கோபம் ஏறிக்கொண்டே வந்ததை உணர்ந்தார் கணக்கப்பிள்ளை. “சரி, நான் போய் வருகிறேன்' என்று விடை பெற்றுக்கொண்டு, பெற்றேன் பிழைத்தேன் என்று புறப்பட்டு விட்டார்.

(இந்த வரலாற்றை என்க்குச் சொன்னவர் நீ வி. கே. சி. நடராஜன்.) .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/104&oldid=584067" இலிருந்து மீள்விக்கப்பட்டது