பக்கம்:நல்ல சேனாபதி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

நல்ல சேனாதிபதி

 கொங்கு நாட்டில் தனியாக அரசர்கள் இருந்து ஆண்ட காலம் சிறியதே. சில காலம் அதன் பகுதிகள் பாண்டி நாட்டைச் சார்ந்திருக்கும்; சோழர் வலிமையுற்ற நாளில் அது சோழர் ஆட்சிக்கு அடங்கியும் இருக்கும்.

{{gap}மேலே சொன்ன சர்க்கரையின் காலத்தில், கொங்கு நாட்டின் பெரும்பகுதி பாண்டிய நாட்டின் ஆட்சியில் இருந்தது. காரையூர் வள்ளல், பாண்டிய மன்னனது ஆட்சிக்கு உட்பட்டவராகவே இருந்தார். அவருடைய பெருவீரத்தை உணர்ந்த பாண்டியன், அடிக்கடி அவரை அழைத்துப் பாராட்டிச் சிறப்புச் செய்வது வழக்கம். அக் காலத்தில் ஆண்ட பாண்டியன், புகழ் பெற்றுச் சிறந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் என்று தெரிய வருகிறது.

{{gap}சோழப் பேரரசு வரவரக் குறுகிக் கொண்டு வந்த காலம் அது. பாண்டியன் வீறுகொண்டு வீரங்காட்டி நாட்டைப் பெருக்கி, சோழ மண்டலத்தின் பகுதிகளையும் கைப்பற்றி ஆண்டு வந்தான். மேலும் மேலும் போர் மேல் நாட்டம் உடையவனாய் நான்கு திசையிலும் படை யெடுத்துச் சென்று, வெற்றிமேல் வெற்றி பெற்று வந்தான். போரிலே காதலுடைய அவனுக்குப் படையைப் பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் இருந்தது இயல்பே.

{{gap}சர்க்கரை மன்றடியாரின் வீரத்தையும், அவருடைய ஆணையின்படி ஒழுகும் வீரர் கூட்டத்தையும் பற்றிப் பாண்டியன் கேள்வியுற்றிருந்தான். சர்க்கரையோடு பழகியதனால் அவருடைய வீரமிடுக்கை நன்கு உணர்ந் தான். தன்னுடைய படைத்தலைவர்களுள் ஒருவராக அவரை அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/11&oldid=1461167" இலிருந்து மீள்விக்கப்பட்டது