பக்கம்:நல்ல சேனாபதி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 நல்ல சேனுபதி

பாட்டு அது என்ற எண்ணம் அவருக்கு உண்டாக வில்லை. புலவரிடம் பீரிட்ட துயரமும் அவருடைய மெய்ப்பாடுகளும் உண்மையை ஊகிப்பதற்கு உதவியாக இருந்தன. - t

புலவர் அப்படியே தொப்பென்று ஓர் ஆசனத்தில் விழுந்தார். அருகில் நின்றவர்கள் அவரைப் போய்ப் பற்றிக்கொண்டார்கள். மருதபாண்டியரே தம் இருக் கையை விட்டு எழுந்து வந்து புலவரைத் தடவிக் கொடுத்தார். "நீங்கள் வருந்த வேண்டாம் என்ன நடந்ததென்று சொல்லுங்கள். உங்கள் குறையை முதலில் தீர்த்துவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்" என்ருர், શ્વે

புலவர் மெல்லத் தம் நிலைக்கு வந்தார். இடை யிடையே துயரம் தடுத்தாலும் தட்டுத் தடுமாறி நடந்த ததைச் சொன்னர் "துரையவர்கள் வீரம் மிக்கவர்கள் என்றும், இந்த நாட்டில் கட்டுக்காவல் அதிகமென்றும், பொல்லாதவர்கள் வாலாட்ட மாட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். அந்தத் துணிவினுல்தான் புறப் பட்டேன். என்னைத் திருடர்கள் அடித்திருந்தாலும் கவலைப்படமாட்டேன். ஒரு பெண்மணி தன் மங்கலி யத்தை இழப்பதென்ருல்-'

'புலவரே, நடந்தது நடந்துவிட்டது. அந்தப்

பாவச் செயலுக்கு நானும் ஒரு வகையில் பொறுப்பாளி தான். உங்கள் மனைவி எங்கே இருக்கிருள்? அந்த அம்மாளை உடனே அரண்மனைக்கு அழைத்து வாருங் கள். பிறகு மற்றக் காரியங்களைப் பார்த்துக்கொள்ள லாம்' என்ருர் மருத பாண்டியர். -

அதிகாரி ஒருவருடன் வண்டியில் புலவர் தாம் தங்கியிருந்த சத்திரத்துக்குச் சென்ருர். தம் மனைவிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/111&oldid=584074" இலிருந்து மீள்விக்கப்பட்டது