பக்கம்:நல்ல சேனாபதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகதூர் தொண்டைமான் 15

வெற்றிக்குக் கொங்கு வீரனுடைய வலிமையே காரணம் என்று அறிந்த சோழன் அவனை மிகப் பாராட்டிப் பரிசு வழங்கின்ை. அன்றியும், தொண்டைமான் என்னும் சிறப்புப் பெயரும் அளித்தான். அதுமுதல் அந்த வீரனை யாவரும் தொண்டைமான் என்றே வழங்கி வரலாயினர். .

பண்டைய நாளில்ஒன் ர்ைபஞ்சு

போலப் பறந்தகலத் திண்டிறல் காட்டிய காளேயை

நோக்கி அச் செம்பியனும் தொண்டைமான் என்று தனதுநற் பேரும் சிறப்புமிக - வண்தரை மீதினிற் பெற்றவ

னும்கொங்கு மண்டலமே என்ற பாடல் அவனுடைய புகழைக் கூறுகின்றது. “பழங்காலத்தில் பகைவர்கள் பஞ்சைப்போலப் பறந்து அகலும்படி திண்ணிய வலிமையைக் காட்டிய வீரனைப் பார்த்து, அவனைத் துணையாகக் கொண்ட சோழன், தொண்டைமான் என்று அவனுடைய பேரும் சிறப்பும் மிகுதியாகும்படி கொடுக்க, இந் நிலவுலகத்தில் பெற்ற வன் இருந்தது கொங்கு மண்டலம் என்பது இதன் பொருள். . .

அந்த வீரனுக்குப் பின் அவன் வழி வந்தவர் களையும் தொண்டைமான் என்றே மக்கள் அழைத்து வந்தனர். மூலனூர் என்ற ஊரில் ஒருவன் தொண்டை மான் என்ற பெயரோடு வாழ்ந்து வந்தான். அவனும் பெருவீரன். அக் காலத்தில் ஆர்க்காட்டில் நவாபு அர சாண்டிருந்தார். கொங்கு நாட்டில் சங்ககிரி என்னும் இடத்தில் உள்ள மலையின்மேல் ஒரு கோட்டை உண்டு. அதைச் சங்ககிரி துர்க்கம் என்பார்கள். அங்கே அரசர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/24&oldid=583987" இலிருந்து மீள்விக்கப்பட்டது