பக்கம்:நல்ல சேனாபதி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நல்லி சேனுமதி

முட்டித் தள்ளி விட்டது; இன்று அந்தக் கடைக்குள்ளே புகுந்தது; இன்று அந்தக் கீரைக்காரியை முட்டித் தள்ளிக் கீரை முழுவதையும் தின்று விட்டது என்பன போன்ற செய்திகள் நாள் தோறும் பரவலாயின. மதம் பிடித்த யானையைக் கண்டு பயப்படுவது போல் மக்கள் அஞ்சினர். பத்துப் பேராகச் சேர்ந்து அதை அடக்கு வது பெரிய காரியம் அன்று. ஆனல் நவாபின் ஆடு அல்லவா அது ? அதன் பக்கத்தில் போக முடியுமா? ஆட்டின் பலத்தைவிட அதிகார பலத்துக்குத்தான் அவர்கள் மிகுதியாக அஞ்சினர்கள்.

நவாபைக் காண வந்தும் செவ்வி நேராமல் கொங்குநாட்டு வீரன் சங்ககிரி வீதியில் உலாவிஞன். நவாபின் அதிகார மிடுக்காலும், உணவுச் செருக்காலும் ஆட்டுக் கடா அடக்குவார் இன்றி, அதே வீதியில் நடைபோட்டுக் கொண்டிருந்தது. -

ஒரு நாள் மூலனூர்த் தொண்டைமான் வீதியிலே நடந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் புலம் பிக்கொண்டு ஓடி வந்தாள். அவள் கையில் பலவகைக் காய்கறிகள் இருந்தன. 'ஆடு, ஆடு ' என்று கதறிக் கொண்டே ஓடினள். பின்னலே நவாபின் ஆடு துரத்திக் கொண்டு வந்தது. தொண்டைமானுக்கு அந்தப் பெண்ணை பார்க்கப் பரிதாபமாக இருந்தது. சட்டென்று ஆட்டுக்கு முன்போய் நின்றன். அது பிரமித்து நின்றது. அவனை முட்ட வந்தது. அவன் தன் ஊரில் மாட்டை யும் ஆட்டையும் அடக்கிய திறலாளன். ஆதலால் நெளிவறிந்து அதை மடக்கி விட்டான். அந்த ஆடு அவனை ஒன்றும் செய்ய முடியாம்ல் வந்த வழியே போய் விட்டது. காய்கறி வைத்திருந்த பெண்மணி பெற்றேன், பிழைத்தேன் என்று ஓடிப்போளுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/27&oldid=583990" இலிருந்து மீள்விக்கப்பட்டது