பக்கம்:நல்ல சேனாபதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசலில் ஏடு 25

  • ' வந்தவர் புலவர் என்று அறிந்தும் நீங்கள் சும்மா இருந்து விட்டீர்களே!” என்று வீட்டில் உள்ளவர்களைக் கடிந்து கொண்டார். அவர்கள் புலவரைத் தங்கியிருக் கும்படி சொன்னதைத் தெரிவித்தார்கள். "நீங்கள் வற் புறுத்திச் சொன்னல் அவரை இருக்கும்படி செய்திருக் கலாம்” என்ருர். -

இந்த நிகழ்ச்சி அவர் மனத்தைப் புண்படுத்தி விட்டது.

கொங்கு நாட்டில் வாழ்ந்திருந்த செல்வர்களில் வாணராயர் ஒருவர். அவர் பவளகுலம் என்னும் மரபில் வந்தவர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சமத்தூர் என்னும் ஊரில் உள்ள குறுநில மன்னர்களுக்கு வாண ராயர் என்னும் சிறப்புப் பெயர் இன்றும் இருந்து வருகிறது. - -

புலவரைக் கண்டு இன்புற இயலவில்லையே என்று

வருந்திய வாணராயர் தம்மை நாடிவரும் புலவர்களிடம் பேரன்பு பூணும் இயல்புள்ளவர். அவர்களால் புகழ் அடைபவர். அவர்களுடைய குறை இன்னதென்று அறிந்து அதனைப் போக்கும் இயல்புடையவர்.

பின்னும் ஒரு நாள் இந்த வாணராயர் வெளியூர் சென்றிருந்தபோது வேறு ஒரு புலவர் வந்தார். அவ ருடைய ஊர், பேர் முதலியவற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள், வீட்டில் உள்ளவர்கள்.அன்பாகப் பேசி, செல்வர் வந்து விடுவார் என்று கொல்லி நிறுத்திவைத் தார்கள். புலவர் ஒருநாள் தங்கினர். தம்முடைய தமிழ்ப் புலமைக்குப் பயனின்றி, யாருடனும் அளவளா மல் சோறு தின்று சும்மா இருப்பதை அவர் விரும்ப வில்லை; பின்பு ஒருமுறை வருகிறேன்' என்று கூறி விடைபெற்றுச் சென்றர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/34&oldid=583997" இலிருந்து மீள்விக்கப்பட்டது