பக்கம்:நல்ல சேனாபதி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசலில் ஏடு 39

" இந்தச் சமயத்திலும் நீங்கள் வந்தவர்களுடன் பேசியது ஆச்சரியந்தான். வருகிறவர்களுக்கு உங்கள் அருமை பெருமை எங்கே தெரிகிறது? அவர்களுக்கு அவர்கள் காரியமே குறி. இந்தச் சமயத்தில் நீங்கள் அறியாமல் ஒரு நல்ல காரியம் செய்தேன்." - -

' என்ன அது?’ என்று கொடைவள்ளல் கேட்டார். " வழியில் போகிறவர்களெல்லாம் உங்களைத் தொந் தரவுபடுத்தக்கூடாது என்பது என் கருத்து. நான்கு ஐந்து நாட்களுக்குமுன் ஒரு பேர்வழி வந்தான். உங்க ளைக் காணவேண்டும் என்று சொன்னன். என்னகாரியம் என்று கேட்டேன். ஒன்றும் இல்லை, சும்மா பேசுவதற். குத்தான் என்று சொன்னன். அதற்கு இது நேரம் இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.”

" அவர் யார் என்று தெரிந்ததோ?’ > 'யாரோ புலவனம். புலவனுக்கு இப்போது என்ன வேலை? நல்ல சாப்பாடு போட்டுப் பாட்டுப் பாடச்சொல் லிக் கேட்கலாம். பல்லை இளித்துக்கொண்டு இந்திரனே சந்திரனே என்று பாடுவான்.” . . -

அவர் பேசிக் கொண்டிருக்கையிலேயே இடை. மறித்து வாணராயர், 'புலவரையா போகச் சொன்னிர் கள்?' என்று கேட்டார்: - - - 馨

" ஆமாம், யாரோ சோம்பேறி!” என்று அலட்சிய மாகச் சொன்னர் அந்த மனிதர், - ... . . . .”.

" அடடா! என்ன காரியம் செய்தீர்கள்? புலவர் வந். திருந்தால் என்னிடம் அழைத்துக்கொண்டு வந்திருக்கக் கூடாதோ?' என்று வருத்தம் தொனிக்கும் குரலில் கேட்டார். - -

" அந்தச் சமயத்தில் அவனை வேறு அழைத்து வந்தால், அவன் எதையாவது சமயம் அறியாமல் அளக்க ஆரம்பித்து விடுவானே" - . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/38&oldid=584001" இலிருந்து மீள்விக்கப்பட்டது