பக்கம்:நல்ல சேனாபதி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசலில் ஏடு 31.

ஊரில் இல்லாதபொழுது, அவர்கள் வந்தால் தம் விருப் பத்தை உணர்த்த முடியாமல் திரும்புவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் எண்ணினர். அதற்கு என்ன வழி என்று அவர் பல நாட்கள் ஆராய்ந்தார். இறுதியில் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். - -

பவளகுலத்தில் பிறந்த அந்த வள்ளல் தம்முடைய வீட்டு வாயிலில் தனி ஒலைகளையும், எழுத்தாணியையும் தொங்கவிடச் செய்தார். எந்தப் புலவர் வந்தாலும் தம்மைப்பற்றியும் தமக்கு வேண்டியதைப்பற்றியும் அதில் எழுதவேண்டும். வாயில் காவலர்கள் பணிந்து மரியாதையோடு ஒலையையும் எழுத்தாணியையும் புலவர் களிடம் கொடுக்க வேண்டும். புலவர்கள் எழுதியதை உடனே ஏவலாளர்கள் உள்ளே கொண்டுவந்து கொடுக்கவேண்டும். வாணராயர் அதைக் கண்டு முதலில் புலவருக்கு வேண்டிய பொருள்களை அளிக்கச் செய்து, அவர் உவகையோடு இருக்கும்போது, தாம் அவரை நேரில் கண்டு பேசுவார். அவர் வெளியூருக்குப் போன காலமாக இருந்தாலும், தம்மை நாடி வந்த புலவருடைய ஊர் பேர் முதலியனவும், அவர் விரும்பியது இன்ன தென்பதும் ஓலையில் இருக்கும். ஊரிலிருந்து வந்த வுடன் புலவர் இருக்கும் இடத்துக்கு அவர் விரும்பிய பொருள்களோடு ஆளே அனுப்பி, மறுமுறையும் வர வேண்டும் என்று சொல்லியனுப்புவார்.

இந்த ஏற்பாடு எங்கும் காணுததாக இருந்தது. சில புலவர்கள் தமக்கு இன்னது வேண்டும் என்று செல்வர்களுக்குச் சீட்டுக் கவி எழுதி அனுப்புவதுண்டு. ஆல்ை, எல்லாரும் எப்போதும் அப்படிச் செய்வதில்லை. எல்லாப் புலவர்களுமே தைரியமாக நேர் நின்று தமக்கு இன்னது வேண்டுமென்று சொல்லமாட்டார்கள். அவர் குக்கு இந்தப் புதிய முறை மிகவும் துணையாக இருந்தது. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/40&oldid=584003" இலிருந்து மீள்விக்கப்பட்டது