பக்கம்:நல்ல சேனாபதி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசலில் ஏடு 38

வழங்கினர். பின்பு அவர்களுடைய தமிழ்க் கவி இன் பத்தை நுகர்ந்தார். பல புலவர்கள் தம்மைப்பற்றி எழுதிய ஒலைகள் அவர் வீட்டில் குவிந்தன. புலவர்களு டைய அன்புச் செல்வத்தை அவர் பெற்று வாழ்ந்தார். சித்தாண்டிசர் மோகினி விலாசம் என்ற நூலில் பவள குல வாணராயர் புகழ் வருகிறது. கட்டியக்காரன் வரு வதைச் சொல்லும் பாட்டு ஒன்றில் வாணராயர் கண்ட வழியைப் புலப்படுத்தும் செய்தி அமைந்திருக்கிறது.

வாயிலில் தொங்கும் ஏட்டில்

வரங்தரப் புலவர்க் கென்றும் ஓய்விலா துதவு கீர்த்தி

ஓங்கவாழ் பவளன், வாண ராயன்எங் நாளும் போற்ற

நலம்.அருள் சித்தாண் டீசர் வாயிலேக் காக்கும் கட்டி r யக்காரன் வருகின் ருனே. வாணராயனுடைய இந்த அரிய செயலைக் கொங்கு மண்டல சதகம் பின்வரும் பாட்டில் பாராட்டுகிறது.

தொங்கவைத் துள்ள பனேஏட்டில்

வாயாற் சொலாதெழுதி. அங்குவைத் தால்அதில் கண்டதை

அன்பின் அரிதின்கல்கி இங்குமற் றும்புல வீர்வரு

வீர்என் றிசைபவள வங்கிசத் தான்வாண ராயனும் வாழ்கொங்கு மண்டலமே. (அங்கு-அவ்வாசலில். அரிதின் கல்கி-வேறு யாரும் செய் யாத அரிய முறையில் கொடுத்து. ராயனும் வாழ்ந்தது கொங்கு மண்டலமே என்று ஒரு சொல் வருவித்து முடிக்க வேண்டும்.)

E-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/42&oldid=584005" இலிருந்து மீள்விக்கப்பட்டது