பக்கம்:நல்ல சேனாபதி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு தேர் ஈந்த செல்வன் 41

இழுத்து விளையாடு” என்று கூறிக் குழந்தையிடம் கொடுக்கச் சென்ருர். அச் சிறுவன் அதனைப் பெற்றுக் கொள்ளாமல் தலையை அசைத்தான். தன் மழலைச் சொல்லால், 'எடுத்துக்கொண்டு போ!' என்ருன்.

அருகில் இருந்தவர்கள் அதைக் கேட்டு வியந்து வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். குழந்தையின் அன்னை குழந்தையை அதட்டவில்லை; ‘பைத்தியமே!’ என்று சொல்லவில்லை. கொடுக்கும் குலத்தில் வாழ்க்கைப்பட்ட அவளுக்கு, தன் குழந்தை யின் இயல்பை எண்ணிப் பெருமிதமே உண்டாயிற்று.

சோழன் தந்த தேரின் அழகையும் சிறப்பையும் பாராட்டியவர்கள், இப்போது சிறுவனுடைய ஈகைக் குணத்தை அறிந்து வியந்தார்கள். புலவர், "அம்மணி, இதை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கயிற்றை அவள் கையில் அளிக்க வந்தார். அவளோ, "வேண் டாம். என் மகன் கொடுத்ததை நான் வாங்குவதா?” என்று தயங்கி நின்ருள்; தலையை ஆட்டி மறுத்தாள்.

இந்தச் சமயத்தில் மும்முடிப் பல்லவராயரே வந்து

விட்டார். தம் வீட்டு வாசலில் கூட்டம் நிற்பதைக் கண்டு விரைந்து வந்தார். 'என்ன?’ என்று கேட்டார். அங்கே நின்றிருந்த ஒருவர் நிகழ்ந்ததைச் சொன்னர்.

புலவர் கண்ணிர் வழிய, "நான் தவறு செய்துவிட் டேன். இந்தக் குழந்தையிடம் கை நீட்டினேன். இவ னிடம் ஒன்றும் கொடுக்க இராதே என்ற அறிவின்றி என் வறுமைக் கொடுமையால் அப்படிச் செய்தேன். இந்தக் குழந்தை தேரையே என் கையில் கொடுத்து விட்டு நிற்கிருன். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. என் பிழையைப் பொறுத்தருள வேண்டும்” என்று மெலிந்த குரலில் கூறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/50&oldid=584013" இலிருந்து மீள்விக்கப்பட்டது