பக்கம்:நல்ல சேனாபதி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியை நாடிய வள்ளல் 49

ஓர் உண்மை புலகிையது. காட்டில் புலி இருப்பதாக யாவரும் அஞ்ச வேண்டும் என்ற எண்ணத்தால், அவர்களே மாட்டை அடித்துப் போட்டிருக்கலாம் அல்லவா?

அந்தக் காட்டில் புலி இருக்க வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்தான் செட்டி பிள்ளையப்பன். தன் நினைவு கைகூடவில்லையே என்று வருந்தி யிருப்பான் அவன்; ஆனல், அப்படிச் செய்யவில்லை. திருடர்கள் தாம் திருடிய பொன்னையும் பொருளையும் பகுத்துக் கொண்ட போது, எதிர்பாராமல் அவன் வந்ததால் அஞ்சி ஓடிவிட் டார்கள். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஒட முடியவில்லை; பெரும் பகுதியை விட்டுவிட்டுப் போளுர் கள். அவை அங்கேயே கிடந்தன.

செட்டி பிள்ளையப்பன் அவற்றின்மேல் கண்ணை ஒட்டினன். உயிரை விட்டுவிட வந்த இடத்தில் பொன் னும் பொருளும் கிடைப்ப தென்ருல், அது இறைவன் திருவருள் என்பதையன்றி வேறு என்ன சொல்வது? அவன், புலவருக்கு ஒன்றும் கொடுக்க இயலவில்லையே! என்று துயருற்றே உயிரை நீக்க வந்தான். எது அவ னிடம் இல்லையோ, அது இப்போது கிடைத்து விட்டது. இனிமேல் உயிரை விட வேண்டிய அவசியம் இல்லையே! - - அவன் தான் வழிபடும் கடவுளை மனமார இறைஞ் சினன். அவன் கண்களில் நீர் துளித்தது. நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது' என்பது அவன் திறத்தில் நல்ல முறையில் பலித்தது. அந்தப் பொருள்களை யெல்லாம் சேர்த்து எடுத்துக் கொண் டான்; நேரே தன். இல்லம் வந்து சேர்ந்தான்.

ஊர்க்காரர்கள் அவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம், 'புலியைக் காண

两一4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/58&oldid=584021" இலிருந்து மீள்விக்கப்பட்டது