பக்கம்:நல்ல சேனாபதி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாண வரி 57

முருகிச் சொன்னவர் மறுபடியும் கம்பர் திருவடிகளில் வீழ்ந்தார். அருகில் நின்றவர்களும் அப்படியே வீழ்ந்து பணிந்தார்கள்.

கம்பருடைய உள்ளம் உருகிவிட்டது. இத்தனை கவலை உள்ள இவர்களுடைய வேண்டுகோளை இறை வன் புறக்கணிக்கமாட்டான் என்ற நம்பிக்கை அவருக்கு உண்டாயிற்று. உடனே அவர் வாக்கிலிருந்து ஒரு கவிதை பிறந்தது.

காவிரி மாநதியைப் பார்த்து இரந்து வேண்டிக் கொள்ளும் முறையில் அந்தப் பாடல் அமைந்தது. நல்ல தீர்த்தமெல்லாம் கங்கையின் அம்சம் என்று சொல்வது இந் நாட்டு வழக்கம். ஆதலால் பொன்னியாகிய காவிரி யும் கங்கையின் அம்சம் உடையதென்றே கொள்வர். இதையும் கம்பர் நினைந்து பாடினர்.

"கன்னி அழிந்தனள், கங்கை திறம்பினள்; பொன்னி கரை அழிந்து போயினள் என்று-இந்நீர் உரைகிடக்கலாமோ? உலகுடைய தாயே! கரைகடக்க லாகாது காண் என்று வந்தது பாட்டு. "கன்னியாகிய பெருமாட்டி தன் வரம்பை மீறினுள்; கங்காதேவி தன் போக்கினின் றும் மாறினுள்; காவிரித்தாய் கரை அழிந்து போளுள்என்று இந்த நீர்மையை உடைய வார்த்தை உன் திறத் தில் நிலை பெறலாமா? உலகையெல்லாம் பாதுகாக்கும் தாயே இத்தகைய பழிச் சொல் வராவண்ணம் நீ அருள் செய்யவேண்டும்; நீ இந்தக் கரையைக் கடப்பது முறையன்று' என்று கம்பர் மனம் உருகிப் பாடினர்.

அவர் பாடிய பிறகு காவிரி வெள்ளம் குறை யத் தொடங்கியது. காக்கை ஏறப் பனம்பழம் விழுந்த கதையாக அது நிகழ்ந்திருக்கலாம். ஆலுைம் கம்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/66&oldid=584029" இலிருந்து மீள்விக்கப்பட்டது