பக்கம்:நல்ல சேனாபதி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவிகை தாங்கிய விரன் 63

முடியுடை வேந்தனையும் அஞ்சச் செய்து வென்ற ஆறைவாணனுடைய வீரத்தைப் புலவர்கள் பாராட்டி ஞர்கள். ஒரு சைவப் புலவர் பாண்டியன் தோற்றதை நயமாகப் பாடினர். 'அந்தக் காலத்தில் வட மதுரை யில் கண்ணனுகி மால் அரசாண்டான். வடக்கே உள்ள மகத நாட்டு அரசனுகிய சராசந்தன் என்பவ ைேடு பொருது தோற்று அவனுக்கு அஞ்சிக் கண்ணன் கடல் நடுவிலுள்ள துவாரகைக்குப் போய்விட்டான். அது வடக்கே நிகழ்ந்தது. இங்கே தெற்கே உள்ள மதுரையில் பாண்டியன் இருந்தான். மகதர்கோமா கிைய வாணன் சீறினமையால் அவன் தென் மதுரையை விட்டுத் தென் கடலுக்கு ஓடிப் போளுன். மகதேசன் முனிந்தால் மன்னர்களுக்குப் புகும் இடம் கடல்தான் போலும்' என்ற கருத்தை அமைத்து ஒரு பாடலைப் பாடினர்.

வன்மதுரை விட்டு

வடகடலான் மால்; வழுதி தென் மதுரை விட்டின்று

தென்கடலான்:-நன்னுதலாய்! மல்லார்தோள் மாகதர்கோ

மான்முனிந்தால் மன்னவருக் கெல்லாம் கடலோ இடம்? (மால் வடகடலான். மாசுகர் கோமான் என்பது சராசந்தனேயும் ஆறைவானனேயும் குறித்தது.)

★ ஆறைவான கிைய இராசராசதேவன் காலத்துக் குப் பிறகு வந்த வான அரசர்கள் அவனைப் போன்ற பெரு வீரம் உடையவர்களாக இருக்கவில்லை. ஆயினும் அவர்களோடு போர் செய்வதற்கு மன்னர்கள் அஞ்சி ஞர்கள். முக்கியமாகப் பாண்டிய மன்னர் மிக அஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/72&oldid=584035" இலிருந்து மீள்விக்கப்பட்டது