பக்கம்:நல்ல சேனாபதி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. நல்ல சேனபதி யால் ஏருழவோ, வெட்டவோ, கொத்தவோ தெரியாமல் யாருக்காவது பல்லக்குச் சுமந்து வாழலாம் என்று வந்தோம்.'

மற்ற இடங்களில் உங்களுக்கு வேலை கிடைக்க வில்லையா?” -

"எங்கள் தலைவர் மிக்க வீரம் உள்ளவர் ; கருணை உள்ளவர் ; பெருந்தன்மை உள்ளவர். அவருடைய சிவிகையைச் சுமந்த பிறகு சிறிய செல்வர்களைச் சுமக்க மனம் வரவில்லை. பெருந்தன்மை உடையவர்களை எளிதிலே காண முடியவில்லையே! இங்குள்ள வான மன்னர் நல்லவரென்று கேள்வியுற்ருேம். இவரிடம் வேலை கிடைத்தால் தொண்டு செய்யலாம் என்று வந்தோம்” என்ருர்கள். -

இந்தச் செய்தி வாணகுல அரசன் காதுக்கு எட்டி யது. அவன் சூரியனையும் அவன் நண்பர்களையும் அழைத்து வரச் செய்து ப்ேசினன். சூரியன் பேச்சிலும் வல்லவகை இருந்தமையால் அரசன் அவனிடம் மயங்கி விட்டான். அவனையும் அவன் நண்பர்களையும் தன் பல்லக்குத் தூக்கிகளாக நியமித்துவிட்டான். புதியதாக ஒரு சிவிகையை அப்போதுதான் செய்வித்திருந்தான். இவர்கள் வந்த சமயம் புதுச் சிவிகைக்கு ஆள் தேடும் சமயமாக இருந்தது. ஆகவே இவர்களுடைய விருப்பம் எளிதில் நிறைவேறியது. -

சூரியனும் பிறரும் சிவிகை தூக்கும் ஏவலர்கள் ஆகிச் சில வாரங்கள் ஆயின. முன்னே தூக்கிப் பழக் கம் இல்லாவிட்டாலும் தோள் வலியுடையவர்களாதலால் அவர்கள் வருத்தமின்றித் தாம் மேற்கொண்ட் செயலைச் செய்து வந்தார்கள். அரசனுக்கும் அவர்களிடம் அன்பு உண்டாயிற்று. சூரியனுக்கோ தான் பாண்டியனுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/75&oldid=584038" இலிருந்து மீள்விக்கப்பட்டது