பக்கம்:நல்ல சேனாபதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நல்ல சேனபதி

முழுதும் ஒரே கறுப்பாகிவிட்டது. உடனே பயந்து போய் வேறு சாதம் பண்ணி வைத்துவிட்டு அதை உண்டேன். அதனல் இப்படி ஆகியிருக்கும் ” என்ருன்.

"அந்தச் சாதத்தில் மிச்சம் இருக்கிறதா?” 'உங்கள் கண்ணில் படக்கூடாதென்று அவ்வள வும் நானே சாப்பிட்டுவிட்டேன். பானையையும் நன்ருகக் கழுவிப் புதிதாகச் சமையல் பண்ணினேன்."

கைக்கெட்டியது தன் மாளுக்கன் வாய்க்கெட்டியது என்றும், தனக்கு எட்டவில்லை என்றும் எண்ணி ஏங்கி ன்ை குரு. சரி, அந்தக் கொம்பு எங்கே இருக்கிறது? எந்த மரத்தில் ஒடித்தாய்?” என்று கேட்டான்.

"நான் எந்த மரத்திலும் ஒடிக்கவில்லை. இங்கே கிடந்தது. அதல்ை கிளறிவிட்டு அதை அடுப்பில் வைத்துவிட்டேன்' என்று மாணுக்கன் கூறினன்.

'அட பாவி!” என்று சொல்லிய குரு அப்படியே பிரமை பிடித்து உட்கார்ந்துவிட்டான். இளமைக் கோலத்துடன் முன்னே நின்ற தன் மாளுக்கனைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு வயிறு பற்றி எரிந்தது. அப்படியே சிந்தனையில் மூழ்கிவிட்டான்.

திடீரென்று அவனுக்கு ஏதோ தோன்றியது. “வெல்லம் வைத்திருக்கிருயா?” என்று கேட்டான்.

"கொஞ்சம் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லிப் பையிலிருந்து அதை எடுத்துக் கொடுத்தான் மாணுக்கன். - * . . . . . . . .

ஆசிரியன் அதை வாங்கிச் சிறிது நேரம் வெளியில் வைத்தான். ஈக்கள் வந்து வெல்லக் கட்டியை மொய்த் தன. குரு அந்த ஈக்களை அப்படியே வெல்லத்தோடு அடித்துக் கொன்ருன். வெல்லக் கட்டியை ஈக்களோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/85&oldid=584048" இலிருந்து மீள்விக்கப்பட்டது