பக்கம்:நல்ல சேனாபதி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நல்ல சேனுபதி

தரக மணலைப் பரப்பி யிருந்தார்கள். அந்த மணலைக் காட்டினர் புண்ணியகோடி. "இது எதற்காகத் தெரி யுமா?" என்று கேட்டார். . . &

"இங்கே ஏதேனும் கொட்டகை போட்டுத் திருமணம் செய்யப் போகிறீர்களா?' என்ருர் புலவர்.

"அதெல்லாம் இல்லை. இந்த மணல், பள்ளிக் கூடத்து மணலைப் போன்றது.”

"எனக்கு நீங்கள் சொல்வது விளங்கவில்லையே!” 'பள்ளிக்கூடத்து மணலில் பிள்ளைகள் எழுதிப் பழகுவார்கள் அல்லவா? இங்கே வருபவர்கள் தங் களுக்கு வேண்டியது இன்னதென்று இந்த மணலில் எழுதட்டும் என்று இதைப் பரப்பச் சொன்னேன்."

"இது என்ன புதுமையாக இருக்கிறதே. அவர்களே ஏன் அவ்வாறு செய்யச் சொல்ல வேண்டும்?"

"இந்த யோசனை உங்களால்தான் வந்தது. இங்கே வருகிறவர்கள் யாவருமே தமக்கு வேண்டியவை இன்ன என்று சொல்வார்கள் என்று நான் நினைத் திருந்தேன். அது தவருண எண்ணம் என்பதை உங்க ளால் உணர்ந்து கொண்டேன். அந்தச் சோழ நாட்டு அன்பர் இங்கே வந்த்தும் தம்முடைய குறையைச் சொல்லவில்லை; என்னுலும் தெரிந்து கொள்ள முடிய வில்லை. அவருக்கு மான உணர்ச்சி மிகுதி; அதனல் தான் வாய் திறந்து எதையும் கேட்கவில்லை. பிறரிடம், எனக்கு இன்னது வேண்டும் என்று வாயாற் சொல்லக் கூசும் மக்கள் பலர் இருக்கிருர்கள். அத்தகையவர் களுடைய குறையை அறிய வழி இல்லையே என்று நான் வருந்தினேன்; யோசித்தேன். அப்போது, இந்தத் தந்திரம் செய்யலாம் என்று தோன்றிற்று."

"என்ன தந்திரம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/95&oldid=584058" இலிருந்து மீள்விக்கப்பட்டது