பக்கம்:நல்ல சேனாபதி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் வேலி அதம்பார்

தஞ்சை மாவட்டத்தில் அதம்பார் என்ற ஓர் ஊர் உள்ளது. அங்கே உள்ள இராமர் திருவுருவம் மிக அழகியது. வடுவூர், தில்லைவளாகம் என்னும் இடங் களில் உள்ள இராமபிரானுடைய திருவுருவங்களோடு அதையும் சேர்த்துச் சொல்வது வழக்கம்.

ஆங்கிலேயர் இந்த நாட்டுக்கு வந்த காலத்தில் இந்த நாட்டில் உள்ள நிலங்களைக் கணக்கெடுத்து, வரி விதிக்க லானர்கள். இதை ஸெட்டில்மெண்ட் என்று சொன் ஞர்கள். அக்காலத்தில் அங்கங்கே அதிகாரிகளை நிய மித்து இந்த வேலையைக் கவனிக்கச் செய்தார்கள். அதி காரிகள் ஊர் ஊராகச் சென்று மணியகாரரை யும் கணக்கப் பிள்ளையையும் பார்த்து அங்கே எத்தனை நிலங்கள் உள்ளன என்றும், அவற்றில் என்ன விளைகிற தென்றும், எப்படி விளைகிற தென்றும் விசாரணை செய் தார்கள். நிலத்தின் தரம், விளைவின் சிறப்பு ஆகிய வற்றுக்கு ஏற்றபடி வரி விதிப்பதற்காக இத்தகைய கேள்விகளை அதிகாரிகள் கேட்டு வந்தார்கள்.

இந்த விசாரணையின் பொருட்டு ஸெட்டில்மெண்டு அதிகாரி ஒருவர் அதம்பாருக்கு வந்தார். அதம்பார் வளமுள்ள ஊர். 'சோற்ருல் மடை யடைக்கும் சோணுட்"டைச் சேர்ந்தது அல்லவா? அது மட்டும் அன்று. அந்தப் பகுதிகளே உரம் பெற்ற நிலம் பரந்த இடங்கள்.

அதிகாரி வந்தவுடன் அவரை மணியகாரரும் ஊரில் உள்ள செல்வர்களும் வரவேற்று உபசரித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/98&oldid=584061" இலிருந்து மீள்விக்கப்பட்டது