பக்கம்:நல்ல சேனாபதி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நல்ல சேனுபதி

நல்ல விருந்தளித்தார்கள். விருந்துண்டு இளைப்பாறிஞர் அதிகாரி, பிறகு ஊரின் நிலங்களைப் பற்றிய விவரங் களை அறியத் தொடங்கி ஊர்க்காரர்களைக் கூட்டினர். ஊரில் நிலங்களுக்குச் சொந்தக்காரர்களான நிலக் கிழவர்களை அழைத்து வைத்துக் கொண்டார். புதிதாக நடைபெறும் விசாரணை ஆதலால் ஊராருக்கே விநோத மாக இருந்தது.

மணியகாரரும் செல்வர். அவர் வீட்டு வாசல் திண் ணையில் அதிகாரி அமர்ந்து கொண்டார். மற்ருெரு திண்ணையில் ஊர்ப் பிரமுகர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மற்றவர்கள் திண்ணைக்குக் கீழே மரியாதையுடன் நின்று கொண்டிருந்தார்கள். ஊர்க் கணக்கப்பிள்ளை அதி காரிக்கு முன்னே சிறிது விலகி மேல் துண்டை இடுப் பில் கட்டிக்கொண்டு கையைக் கட்டினபடியே நின்ருர், அரசாங்க அதிகாரி என்ருல் அந்தக் காலத்தில் அவ் வளவு மரியாதை, பயங்கூட உண்டு.

அதிகாரி என்ன கேட்பாரோ என்று எல்லோருக் கும் ஒரு விதமான பயம். அவர், "இந்த ஊர் நிலங்கள் எல்லாம் எப்படி? நல்ல வளப்பம் உடையவையா? எத்தனை வேலிகள்?’ என்று கேட்டார். கணக்கப் பிள்ளையைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டார். . *

யாருக்கும் தம்முடைய ஊரின் வளப்பத்தைப் பற்றிச் சொல்வதென்ருல் உற்சாகம், வானம் பார்த்த பூமியுள்ள ஊர்களில் இருப்பவர்களைப் போய்க் கேட்டுப் பாருங்கள். 'காவேரிப் பாசனம் எதற்கு ஆயிற்று? இங்கே சரியானபடி விளைந்தால் பொன்னைக் குவிக்க லாமே!” என்று சொல்வார்கள். அப்படியானுல் நீர்வளம் படைத்த சோழ நாட்டைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? இலக்கியங்கள் சோழ நாட்டு வளத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/99&oldid=584062" இலிருந்து மீள்விக்கப்பட்டது