பக்கம்:நல்ல தமிழ்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபின் வழியே 109 விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புல்வர்.' (483) என எழுத்ததிகாரத்துக்கும், இன்னும் அவ்வதிகாரத்தில வரும் சில இயல்களுக்கும் புறநடைச் சூத்திரங்கள் செய்த தொல்காப்பியனார், மற்ற இரண்டு அதிகாரங்களுக்கும் புற நடைச் சூத்திரம் செய்யவில்லை. ஒரு வேளை அவற்றில் மாறுபாடுகள் வாரா என்ற காரணத்தினால் சொல்லாமல் இருந்திருக்கலாம். அடிப்படை எழுத்துக்களிலும், அவற்றின் அமைப்பு முறையிலும், சொற்களிலும் அவை சேரும் வகை யிலும் மொழியில் மாற்றம் இருக்குமன்றி, செம்மை செய்யப் பெற்ற சொல் நிலையிலும் பொருள் அமைதியிலும் அவற்றின் மரபு, பண்பாட்டு நிலையிலும் மாற்றம் தேவை இல்லை என்பதைக் காட்டியுள்ளார் அவர். இந்த நில்ை யிலேதான் இன்றும் மாற்றம் பற்றிப் பலர் வாதிடுகின்றனர். எனவே, தமிழ் இலக்கண மரபறிந்து சிறக்க எழுதப் பழகி கினால், நல்ல தமிழ் உருவாகும் என்பது உறுதி. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/113&oldid=775023" இலிருந்து மீள்விக்கப்பட்டது