பக்கம்:நல்ல தமிழ்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நல்ல தமிழ் இல்லை என நினைக்கிறேன். முதல் எழுத்துக்களின் அமைப்பே, அதை நன்றாகப் புரிந்து கொண் டா ல் தமிழைத் தவறு இன்றி எழுத உதவும். உலகில் வாழ் வதற்கு முதலாக அமைவன உயிரும் உடம்பும். அவை இரண்டும் கலந்த பிறகே மற்றவற்றின் சார்புகள் ஏற்படும். இந்த உலக நிலைதான் தமிழ் எழுத்துக்களின் நிலையும். உடலும் உயிரும் ஒன்றுதல் இயல்பு. பிறகு மற்றவை வந்து சாரும். இதைத்தான் இலக்கண நூலோர் உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்று எழுதி வைத் திருக்கின்றனர். உயிர் பிறந்தால் மெய் ஒலியற்றதாகி விடுகிறது. உயிர் பன்னிரண்டு; மெய் பதினெட்டு இவை முப்ப திலேயும் சில பிரிவுகள் உள்ளன. உயிர் எழுத்அக்களை அவற்றின் ஒலியின் தன்மைக்கு ஏற்பக் குறில், நெடில் என்று இரண்டாகப் பிரித்துள்ளார்கள், உயிர் வரிசையில் ஐ, ஒள' என்னும் இரண்டு எழுத்துக்களை எழுதும்போது சில சமயங் களில் இடர்ப்பாடு உண்டாகின்றது. இவை தனி எழுத்தா என நினைக்க வேண்டியுள்ளது. வடமொழியில் இவை போன்ற இரண்டு ஒலி கலக்கும் எழுத்துக்களைக் கூட் டெழுத்து என்று சொல்லும் மரபு உண்டு. இங்கே அப்படிச் சொல்லவில்லை. என்றாலும், இவை இரண்டும் இரண்டு ஒலி கள் இணைந்தவையே. 'ஐ' என்பதற்குப் பதில் 'அய்' என்றும் 'ஒள' என்பதற்குப் பதில் அவ்' என்றும் எழுதுவதில் தவறு இல்லை. இவ்வாறு எழுதவதை எழுத்துப் போலி என்று இலக்கண நூலோர் கூறினாலும், எழுதுவது தவறு என்று அவர்கள் கூறவில்லை; கூறவும் கூடாது. எனவே, உயிர் பன்னிரண்குல் 'ஐ', 'ஒள' என்ற இரண்டு எழுத்துக் கள் தேவை இல்லை என்று கூடச் சிலர் சொல்லலாம். ஆனால், அதுவும் பொருந்தாது. அவற்றின் ஆட்சியை ஊன்றிக் கவனித்தால், அவை இருப்பதால் தமிழில் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/22&oldid=775084" இலிருந்து மீள்விக்கப்பட்டது