பக்கம்:நல்ல தமிழ்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நல்ல தமிழ் உயிர், மெய் எனப் பிரித்தனர். உலக வாழ்வுக்கும் உயிரும் மெய்யும் அடிப்படையல்லவா! இரண்டும் பிரியின் உலக வாழ்வு ஏது? மொழியின் வாழ்வும் அப்படியே, உயிர் மெய் யோடு கலந்து இயல்பாகவே இயங்காவிட்டால், மொழி ஏது? உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே. (204) என்று நன்னூலார் இந்த உலக இயல்பை இலக்கணத்தின் மேல் ஏற்றிக் காட்டியுள்ளார். எப்படி உயிர் உடம்போடு கூடிய வாழ்வு சேர்க்கை வாழ்வோ - கூட்டு வாழ்வோஅது போன்றேதான் உயிர்மெய் எழுத்தின் வாழ்க்கையும் அமைகின்றது உயிர் நீங்கின், உடம்பின் வாழ்வு இல்லை; உயிரின் நிலையும் அறிய முடியாது என்றாலும், உலக வாழ்வுக்கு அடிப்படை அந்த உயிரும் உடம் மேதான். அதே நிலை எழுத்துக்கும் பொருந்தும். ஆகவேதான் முன்பு உயிர், மெய் என்ற இரு வகை எழுத்துக்களைத் தவிர்த்துப் பிற வற்றைத் தனி எழுத்துக்களாக எண்ண வேண்டா என்று சொன்னேன். இங்கே வினைச் சொல்லைக் கண்டோம் உலக வாழ் விற்கே, வினை முக்கியமானது அவரவர் வினை வழியே உலக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்பர் பழம்பிறப்பில் பற்றுக்கொண்டவர். இல்லாதாருங்கூட, அவர்தம் வினை அல்லது செயல் வழியேதான் வாழ்க்கை நடத்துகின்றனர். வினை என்ற சொல் சென்ற காலத்து முன் பிறப்பின் செயலை உணர்த்தி அதன் பிந்திய ஆக்கத்தையும் உணர்த்து கின்றது; அன்றி, அவ்வப்போது செய்யும் வினையையும் உணர்த்துகின்றது. இந்த வினையே வாழ்வின் அடிப்படை. வினை இன்றேல், செயல் இல்லை. செயலற்ற உயிான் நீங்கிய உடம்புக்கு வினை உண்டோ? இல்லை. அவ்வுடம் பின் நீங்கிய உயிர் மறுபடி உடலோடு சேர்ந்தால்தான் வினை உண்டு. இங்கும் அப்படித்தான். உயிர் உடலின் நீங்கி னும் சில சமயம் இயங்கும் எனச் சிலர் சொல்வது போன்று, 'ஈ' என்பது போன்ற வினைகளும் உள்ளன. மொழிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_தமிழ்.pdf/40&oldid=775123" இலிருந்து மீள்விக்கப்பட்டது