பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன்

9

மருத்துவனும், உயிர்ப்பினைக் கட்டுப் படுத்தும் அறிஞனும் நாளோடு தவறாது காணும் முதுமையை நீ சந்தித்ததில்லை எனில் புதுமை அன்றோ !

நிலவு கூறினாள்.

ஆடல் பயில்வாரின் உடல் வாடல் இல்லை. புதுமை மாறாத ஆடற்கலைஞருக்கு முதுமை நேருமோ பேரரசியாரே?
[அனைவர் கண்ணிலும் வியப்பு]

பேரரசியார் பேசுகின்றார்.

நிலவே! நீடுவாழ்க. புதியதோர் எண்ணம்! நினைக்கும் தோறும் வியப்பைச் செய்யும் ஓர் ஒப்பற்ற நிலை நீ தந்தாய் நீ வாழ்க!
ஆடல் அரங்கு முடிவு பெற்றது. அனைவரும் உணவு கொள்ளச் செல்வோமாக.
[அனைவரும் செல்கிறார்கள். படைத் தலைவன் மகளாகிய கிள்ளை மட்டும் பறக்கவில்லை]
காட்சி 2
[அரங்கில் ஒரு புறம். நிலவு காற்சதங்கையை அவிழ்க்கக் குனிகிறாள். அதற்குள் வேறோர் மலர் போன்ற கை சதங்கையை அவிழ்த்து உதவி செய்கிறது.]

நிலவு : என் செல்வமே! நீ யார்?

கிள்ளை : அன்னையே! படைத்தலைவர் மகள்; கிள்ளை

நிலவு : உன் பிரிவு உன் அன்னை தந்தையர்க்குத் துன்பத்தைச் செய்யுமே!

கிள்ளை : ஆடல் பயிலவிரும்புகிறேன். அந்த விருப்பம் என் உடலின் ஒவ்வோர் அணுவிலும்

2—6716