பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 வெளியில் ஓடி விளையாடி விதியில் அலைந்தே இரைதேடி, களிப்பாய் வாழ்ந்திடத் தடைஏனோ? காவல் செய்வதும் முறைதானோ?” என்றே எதிர்த்தே பேசிவிட்டு, ஏளன மாகவே நடந்ததுவே! “இன்றே நானும் வளர்ந்துவிட்டேன்! எதிர்ப்பவர் யார்? எனப் போனதுவே! அங்கும் இங்கும் அலைபாயும் ஆணவ மாகவே இரைதேடும்! பொங்கும் கர்வம் கண்களிலே பூத்துக் குலுங்கிடக் குரல்கொடுக்கும். தாயின் சொல்லை மதிக்காத தன்மையை பெரிதாய் நினைத்திருக்கும். வாயும் வயிறும் நமக்குத்தான்! வாழ்வுக்கு தாயின் துணைஎதற்கு? மற்ற குஞ்சுகள் மனதினையும் மாற்றிட முயன்றது அக்குஞ்சு. கற்றுக் கொடுத்திட முயன்றதுவே! காதும் கொடுத்தவை கேட்கவில்லை!