பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தனியே திரிந்தது அக்குஞ்சு. தாவிப் பறந்தது தானென்று - இனி நான் யாருக்கும் அடிமையில்லை என்றே துணிந்தது நடந்ததுவே! பலநாள் இதனைப் பார்த்துவந்த பருந்தும் காலம் பார்த்ததுவே பலகா ரம்போல் உண்டிடவே பறந்தும் பதுங்கியும் இருந்ததுவே! குஞ்சும் வருவதைக் கண்டவுடன் குறியாய் இருந்த கருடனுமே கொஞ்சம் கூடத் தவறாமல் கால்களில் கவ்விப் பறந்ததுவே! யாரோ அறைந்தது போல்இருக்க, யாரோ குரல்வளை தான்நெறிக்க யாரோ தன்னை உயிர்எடுக்க என்றே குஞ்சும் அலறியதே! சத்தம் கேட்டத் தாய்க்கோழி சமர்த்தாய் தானும் உடன்பறந்து, கொத்திப் பருந்தைத் தாக்கிடவே, குஞ்சைப் போட்டுப் பறந்ததுவே!