பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புனிதக் குழந்தையைத் தீண்டாதே! பொறுமையை இழக்கத் தூண்டாதே. தெய்வத் திடம்நாம் பழகுதல் போல் தெரிந்தே பழகிட வேண்டாமோ!

செய்வதை நன்மையாய் செய்துவிடு! சிந்தை குளிரும் புரிந்துவிடு எறும்பும் தன் பிழை உணர்ந்த தடா கரும்பாய் காரியம் முடிந்தடா!

பந்தாட்டம்

பாப்பா மலர்போல் சிரித்தாளே! பாட்டி பொக்கைவாய் விரித்தாளே! பசியும் ஆறினான் மணிசாமி பசுவை மேய்த்திட நடந்தானே!

புல்லை மேய்ந்தது வெள்ளைப் பசு! புதரும் மறைந்தது நிறைவாக. பந்தும் தெரிந்தது தெளிவாக. பாய்ந்தான் தருமன் எடுத்திடவே!

துள்ளித் துள்ளி ஆடுகிறான். துய்மை மனம்பெற ஓடுகிறான்! உள்ளம் களித்தே ஆடுகிறான்! உலகை மறந்தே ஆடுகிறான்!