பக்கம்:நல்ல நல்ல கதைப் பாடல்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கங்கை சிவன் தலையில் குதித்தது போலவே அங்கே மேலேறி குதித்தனள் காவேரி, அதுதான் அழகுதிவ சமுத்திர நீர்வீழ்ச்சி நிதமும் குதித்தாடும் நேரிய கண்காட்சி! குறுக்கே வந்தது கொங்கு நாடு - அதைக் கடந்தோ போவது மேக தாடு. பூவார் சோலைகள் மயிலாட - பெரும் புண்ணிய குயில்களும் இசைபாட, காமர் மாலைகள் அருகசைய - அங்கு கவினுற நடந்தனள் காவேரி! வென்றாள்காவேரி - எழில் கோலத்தைக் கொண்டாள் காவேரி,