பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OO + டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா கண்ணன்: துரியோதனா! எத்தனை பெரிய மனது உனக்கு? இரக்க சிந்தை வேண்டாமா? கொடி கட்டி ஆண்டவர்கள், கோபுரம் போல் வாழ்ந்தவர்கள், இன்று நாட்டின் கோடியிலே நிற்கின்றார்கள். அவர் கேட்பது-ஆள நாடு வேண்டாம்.ஐந்து நகா... துரியோ நகரா...அது நகராது. கண்ணன்:நகர வேண்டாம். ஊரலாமே...ஐந்து ஊராவது! கர்ணன். யார் தருவார் ஊர்? பேசாமல் போய் எங்கே யாவது சத்திரம் சாவடியில் தங்கச் சொல்லுங்கள். இந்த நாட்டை ஆள வேண்டியவர்கள் வீரர்கள்; கோழைகள் அல்ல. கண்ணன் வீண்பேச்சு வேதனையைத் தரும். சொற்களைக் கொட்டி விட்டால், பிறகு அள்ளிக் கட்ட முடியாது. மன்னா, ஊரும் வேண்டாம், அவர்கள் தங்கி வாழ ஐந்து வீடாவது?... சகுனி வீடா?...காட்டில் ஒரே வீட்டில் வசித்தவர்களுக்கு 5 வீடு எதற்கு? ஐயோ ஐயோ! (கேலியாக) இப்படிப் பிச்சை கேட்கலாமா? கேவலம! துரியோ மாமா... அவர்கள் அப்படிப்பட்டவர்கள் தான்... கண்ணன்:துரியோதனா! நா அடக்கம் வேண்டும். நல்லவர்களை ஏசுவதை நாடு பொறுக்காது. நீ நடந்து கொள்ளும் முறை, பேசும் பேச்சு எல்லாம் போரை விரும்புகிறாய் என்பதையே காட்டுகிறது.