பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் - 11 கத்தையே காக்கப் போய் விட்டார். என்ன செய்யலாம்? வெண்ணெய் ஆகி விட்ட பின் அது பாலாக மாற முடியாது வேந்தே? சுத்தோ: உதாரணம் புரிகிறது? ஆனால் என் * உள் ளத்திற்கு யார் புரிய வைப் பது? என் மகனை ஒரு முறை அழைத்து வாருங்கள் என்று ஆள் மேல் ஆள் அனுப்புகிறேன். எனக்குக் கிட்டாமல் பேர்ண் மகன், இன்று-இன்னும் எட்டாத தூரத்திற்கே போய்க் கொண்டி ருக்கிறான். அவனைக் காணாமலேயே நான் ஒரு வேளை... (வேதனை தாங்காமல், அங்கு இருக்கும் ஒரு ஆசனத்தில் அமர்கிறார். அமைச்சரும் சேனாதிபதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.) - - گی சேனாதி: அரசே! கடைசி முயற்சி. நம் சித்தார்த்தரின் நெருங்கிய நண்பரும், சிறந்த அறிவாளியுமான உதாயி என்ற அந்தணரை தூது அனுப்பி யுள்ளோம். - 3.3.69." (ஏளனமாக) அவரும் துறவியாகி விட்டாரா? - ' சேனாதி: (தயக்கத்துடன்) ஆமாம். கத்தே தெரிந்த கதை தானே! இதில் என்ன புதுமை இருக்கிறது என்று என்னிடம் கூற வந்தீர்கள்? சேனாதி: துறவியாகி விட்டாலும், தன் முயற்சியில் வெற்றி புெற்று விடுவார் என்ற நம்பிக்கையான சேதி வந்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/12&oldid=775397" இலிருந்து மீள்விக்கப்பட்டது