பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 13 புத்தர்: உதாயி! தோன்றும் பொருள்கள் எல்லாம் உலகத்தில் ஒரு நாள் அழியக் கூடியதே நம் உடலும் அப்படித்தான். நாம் தொடங்கும் காரியமெல்லாம் முடிவதும் தொடர்வதும் நம் ‘. . கையிலே இல்லை. ஆகவே, எதற்கும் ஆசைப்படாமல் இரு. - . . . உதவி பகவானே!. இருந்தாலும்... எனக்கு ஒரே ஒரு ஆசை.. • - புத்த ஆசையா. ஆசைதான் அத்தனை துன்பங் களுக்கும் காரணம். அந்த ஆசையை வெல்லும். போது தான் ஆணவம் அழிகிறது. அகங்காரம் தொலைகிறது. ஆனந்தம் பெருகி ஆன்மா குளிர்கிறது. ஆகவே, கவலைகளுக்கெல்லாம் காரணமான உன் ஆசைகளைக் களைந்து விடு. உதாயி: உண்மைதான் பகவானே! இருந்தாலும், இது தான் என்னுடைய இறுதி ஆசை. புத்தர்: - ம்.... (தலையசைக்கிறார்) - உதாயி: எனக்குக் கதை சொல்வதில், கவிதை பாடுவதில் கொஞ்சம் பயிற்சி உண்டு. சொல்ல வேண்டும் என்ற ஆசையும் உண்டு. அந்தக் கதையை உங்களிடம் இன்று கூறி விட வேண்டும் என்ற ஒரே ஒரு கடைசி ஆசை. -- - - - --- - புத்தர். அப்படியா! உன் விருப்பம் போலவே ஆகட்டும். உதாயி: பெருமானே... அது நல்ல இளவேனிற் காலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/14&oldid=775399" இலிருந்து மீள்விக்கப்பட்டது