பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா பூர்ணிமை உள்ள பெலிவான நாள். பொன் மயமாகக் காட்சியளிக்கின்ற பூஞ்சோலை ஒன்றில், மஞ்சள் வெயில் பாடும் மனோ - . - கரமான வேளை... மங்களகரமான சூழ்நிலை, அப்பொழுது அழகே உருவான, ஆடம்பரம் நிறைந்த பல்லக்கு ஒன்று அங்கு வருகிறது. தாதியர் படை சூழ வந்த அந்த பல்லக்கிலிருந்து, அரசியர் ஒருவர் கீழிறங்கி வந்து, இயற்கைக் காட்சிகளில் தன் இதயம் வசமிழக்க, தன்னையே மறந்து நிற் கிறார். தாய்மைப் பேறுக்காகத் தன் தாய் வீடு சென்று கொண்டிருந்த அரசிக்கு, அங்கேயே ஒரு ஆண், குழந்தை பிறந்து விடுகிறது. அந்த அழகிய தெய் வாம் சமுள்ள குழந்தையைப் பெற்ற புனிதவதி. இல்லை. அபாக்கியவதி, ஏழாம் நாளன்று இறந்து போகிறார். - புத்தர்: பாவம். 轟 彈 உதாயி தாயில்லா அந்தக் குழந்தையை, தன் தோள் மீதும், மார் மீதும் பொன்னைப் போல், கண்ணைப் போல் வைத்துக் காப்பாற்றுகிறார் தந்தை தனக்குப் பிறகு தன் மகன் துணை யிருப்பான் என்ற தளராத நம்பிக்கையுடன் வளர்த்தார். ஆனால், வயதான அந்த தந்தையுடன், அந்த மகனோ வாழவில்லை. புத்தர்: ம்... மகன் எங்கே போய் விட்டான்?. e உதாயது: காட் டிற் கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/15&oldid=775400" இலிருந்து மீள்விக்கப்பட்டது