பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் 15 புத்தர்: உதாயி: புத்தர்: புத்தர்: உதாயி: புத்தர்: காட்டிற்கா... ஏன்? (மெளனம்) ஏன் மெளனமாயிருக்கிறாய்? ஏன் காட்டிற்கு போனான்- அவன் பெயர் என்ன?... பெய.ர். சித்தார்த்தர். உதாயி... நீ என்ன சொல்கிறாய்? ஆம் பகவானே!. கபில் வஸ்துவை ஆளும் சக்கரவர்த்தி சுத் தோதன மகாராஜாவிற்கும், ராணி மாயாதேவிக்கும் பிறந்த அந்தக் குழந்தையின் பெயர் சித்தார்த்தர். தன் மகனை இழந்த மன்னர் பிரான், தன் மகனை ஒரு முறை காண வேண்டும் என்று துடித்து, ஒன்பது முறை தூதுவர்களை அனுப்பினார். தூது வந்தவர்கள் எல்லாம் துறவியானார்கள். கடைசி முறையாக என்னை அனுப்பினார்கள். காந்தத்தினால் கவரப் பட்ட இரும்பு போல, உங்கள் காலடியிலே அடிமையாகி நிற்கும் என் கோலத்தைப் பாருங்கள். ஆனால், பகவானே! நான் வந்த நோக்கம். உங்களை அழைக்க வேண்டும் என்ற நோக்கம்...எப்படியோ என் கடமை... முடிந்தது. உதாயி! உண்மையும் அறிவும் நிறைந்த அந்தணரே! இனி என் கடமை தொடங்கப் போகிறது. சாக்கிய வம்சத்தினரை யெல்லாம் புத்த மதத்திற்குக் கொண்டு வரும் காலம் வந்து விட்டது. கபில வஸ்துவிற்கு நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/16&oldid=775401" இலிருந்து மீள்விக்கப்பட்டது