பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 உன் மனம் போல் நடக்கும். இராகு: நன்றி பெருமானே நன்றி. (போகிறான் ஆனந்தத்துடன்) புத்தர்: ராகுலா! நீயுமா... (சிலையாக நிற்கிறார் குழப்பத்துடன்) -திரை காட்சி 6 இடம்: கானகம். உள்ளே: புத்தர், உதாயி,இராகுலன், சுத்தோதனர். (புத்தர் யாரையோ எதிர்பார்த்து இருப்பது போல ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவசர அவசரமாக உதாயி அங்கு வருகிறார்) புத்தர்: உதாயி-சடங்குகள் நடத்த எல்லாம் தயாரா? உதாயி: இராகுலன் வரவேண்டியது தான்-வந்தவுடன் தொடங்கி விடலாம். புத்தர் (சிறிது நடந்து) இந்த இளம் வயதில் அவனுக்கு வந்த ஆசையைப் பார். ஆசை யாரையும் விடுவதில்லை, நிழல் போல் தொடர்ந்து வருகிறது. ம்.. ஆசை மனிதனோடு கூடவே பிறந்து கொல்லும் வியாதி, இந்த வியாதிக்கு மருந்துதான இந்தத் துறவறம. அகிலத்திற்குத் தருகின்ற இந்த மருந்தைத்தான் நாம் அவனுக்குத் தரப் போகிறோம். (இராகுலன் இரைக்க இரைக்க ஓடி வருகிறான்) அப்பா... (மர்ற்றிக்கொண்டு) புத்த பகவானே! அந்த மருந்தைத் தாருங்கள் சீக்கிரம்(அவரது பாதம்வணங்குகிறான். ராகுலா, ராகுலா என்று அழைத்த வாறு சுத்தோதனர் ஓடி வருகிறார் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க) சுத்தோ: வேண்டாம் புத்த பகவானே! வேண்டாம்! அவனுக்கு, அந்தத் துறவறம் வேண்டாம் எங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/28&oldid=775414" இலிருந்து மீள்விக்கப்பட்டது