பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் - 31 காட்சி - 1 இடம்: பறம்பு மலை உள்ளே பாரி, கபிலர். (தமிழ் இலக்கியம்...புறநானூறு) கடை யெழு வள்ளல்களில் ஒருவன்...கொடையிலே மாரி... அவன் தான் பாரி... பறம்பு மலைத் தலைவன்...பார் போற்றும் கோமான். பாரியின் புகழ் பெருகப் பெருக, பாராண்ட மூவேந்தர்களின் உள்ளம் பொறாமையால் வேகிறது. Ups?-6).j... பறம்பு மலை மூவேந்தர்களால் முற்றுகை இடப்படுகிறது. மூன்று மாதங்கள் கடந்தாலும் வெற்றி பெற முடியவில்லையே... துடித்த மூவரின் தரதுவராகப் போகிறார் பாரியின் நண்பர் பாவேந்தர் கபிலர். அதன் விளைவாக ... நாடாண்ட மூவரும் பாணராக வேடம் போட்டு, பாரியின் முன்னே பாடினர், ஆடினர்... பாரி பார்த்தான்; சுவைத்தான்; பரிசு என்னவேண்டும் என்று கேட்டான். * மண்ணையோ, பெசன்னையோ மன்னர்கள் கேட்கவில்லை... பாரியையே பரிசாகக் கேட்டனர். படையிலே வீரம் காட்டிய பெருமகன், கொடை தர மறுத்தானா...? தடுத்தானா...? இறுதியில் அவன் தந்த பரிசு என்ன?

=

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/32&oldid=775419" இலிருந்து மீள்விக்கப்பட்டது